இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

8 கார்த்திகை 2023 புதன் 07:37 | பார்வைகள் : 7227
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் 08.11.2023 காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் அம்பொன் நகரிற்கு தென்கிழக்கே 370 கிமீ (229.9 மைல்) தொலைவில் 146 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.