Paristamil Navigation Paristamil advert login

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: எச்சரிக்கிறார் கிரண் ரிஜிஜு

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: எச்சரிக்கிறார் கிரண் ரிஜிஜு

12 மார்கழி 2023 செவ்வாய் 13:06 | பார்வைகள் : 6368


ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் மோடியின் உத்தரவாதம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் எந்த அமைச்சரும் ஒரு ஊழல் வழக்கில் கூட சிக்கவில்லை. இதற்கு காரணம், ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

காங்கிரசுடன் தொடர்புடைய ஊழல்வாதிகளால் மீண்டும் ஊழல் சம்பவங்கள் தலைதூக்குகிறது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் மோடியின் உத்தரவாதம். பிரதமர் மோடி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்