பிரான்சில் : 2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்!
12 மார்கழி 2023 செவ்வாய் 13:47 | பார்வைகள் : 4143
2023 ஆம் ஆண்டி பிரெஞ்சு மக்கள் அதிகளவில் கூகுளில் தேடிய வார்த்தைகளின் பட்டியலை நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவ்வருடத்தில் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளில் முன்னிலையில் உள்ளது ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதன் பின்னர் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பல வார்த்தைகள் தேடப்பட்டுள்ளன.
இவ்வருடத்தில் பெரும் சோக சம்பவமாக மாறிப்போன கணாமல் போனா இரண்டரை வயது சிறுவன் எமிலி தொடர்பாகவும், வடக்கு பிரான்சை புரட்டிப்போட்ட சியாரா புயல் தொடர்பாகவும் அதிகமாக தேடப்பட்டுள்ளன.
அதேவேளை, நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பாகவும், 49.3 எனும் அரசியலமைப்பு தொடர்பாகவும் தேடப்பட்டுள்ளன.
உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé மற்றும் ரக்ஃபி வீரர் Antoine Dupont ஆகியோரும் அதிகளவில் தேடப்பட்டுள்ளனர்.
அதேபோல் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி புகைப்படங்கள் உருவாக்குவது எப்படி?, ‘மின்சாரக் கட்டணம் ஏன் அதிகரிக்கிறது, எரிபொருள் கொடுப்பனவுகளை பெறுவது எப்படி? போன்ற கேள்விகளும் அதிகளவில் தேடப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.