பார்லிமென்ட் பாதுகாப்பு நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகள்
13 மார்கழி 2023 புதன் 21:40 | பார்வைகள் : 2067
பார்லிமென்ட் லோக்சபாவில் அத்துமீறல் சம்பவம் எதிரொலியாக பார்லிமென்ட் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த பார்லிமென்ட் லோக்சபா கூட்டத்தொடரின் போது லோக்சபாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இசம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
* இனி பார்லிமென்டின் பிரதான நுழைவு வாயிலில் இனி எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும் , எம்.பி.,களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை,.
* விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் விமான பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷன் போன்று பார்லிமென்ட் நுழைவு வாயிலில் பொருத்தப்படும்<br><br>* பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும்.
* பார்லிமென்ட் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் தனி பாதையில் வர வேண்டும்.
* பார்வையாளர்கள் கால தாமத்துடன் வந்தால் அவர்கள் அதற்கான தனி பாதை வழியாக வரவேண்டும்.
மக்களை மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் .
என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.