கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் இருந்து பெற்றோருக்கு அனுப்பப்பட்ட ரசீது!!
13 மார்கழி 2023 புதன் 17:52 | பார்வைகள் : 5837
கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் இருந்து மாணவன் ஒருவரது பெற்றோருக்கு அனுப்பப்பட்ட ரசீது ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் Witry-lès-Reims (Marne) நகரில் உள்ள Léonard-de-Vinci கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. 12 வயதுடைய மாணவன் ஒருவர், குறித்த கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் உள்ள கோப்பை ஒன்றை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ₤3.28 யூரோக்கள் தொகையை கோரும் குறித்த ரசீது அவரின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ரசீது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து பாடசாலை நிர்வாகத்துடனும், ஊடகத்தினரிடமும் உரையாடினார். “கோப்பை வேண்டுமென்றே உடைக்கப்பட்டது என்றால் அது தண்டிக்கப்படவேண்டியது. ஆனால் இது அப்படி இல்லை. இந்த ₤3.28 யூரோக்கள் எதைக் குறிக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த முரன்பாடு சமரசமாக முடிவுக்கு வந்துள்ளது. ‘கோப்பைகளுக்கு என ஒரு பெறுமதி உள்ளது. அதனைச் செலுத்தவே வேண்டும்’ என சிற்றுண்டிச்சாலையினர் தெரிவிக்க, ‘ஒரு சத குற்றிகளால் (328 குற்றிகள்) பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார்.