Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

பரிஸ் : வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

13 மார்கழி 2023 புதன் 20:00 | பார்வைகள் : 6634


கடந்த சில நாட்களாக தொடர்பற்று போயிருந்த ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

11 ஆம் வட்டாரத்தின் Cité Voltaire பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மாலை 7 மணி அளவில் இந்த சடலம் மீட்கப்பட்டது. 34 வயதுடைய குறித்த நபர் கடந்த சில நாட்களாக தொடர்பற்று இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று மாலை குறித்த வீட்டின் உதிரி சாவி மூலம் கதவை திறந்த அவரது தாய், உள்ளே மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார்.

அதன்பின்னரே சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதற்கட்டமாக உடற்கூறு பரிசோதனைகளுக்கான சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்