Paristamil Navigation Paristamil advert login

”காஸாவில் செய்தது போல் உன்னை வெட்டுவோம்!” - குழந்தைகள் பராமரிப்பு நிலைய நிறுவனருக்கு கொலை மிரட்டல்!

”காஸாவில் செய்தது போல் உன்னை வெட்டுவோம்!” - குழந்தைகள் பராமரிப்பு நிலைய நிறுவனருக்கு கொலை மிரட்டல்!

14 மார்கழி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 9382


Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலைய நிறுவனர் ஒருவருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 12, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Les minis Kids எனும் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குச் சென்ற ஒருவர், அதன் பெண் நிறுவனரை கத்தி மூலம் மிரட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 15 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றின் மூலம் கழுத்தை வெட்டுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

”நீங்கள் ஒரு யூதர். நாங்கள் ஐந்து பேர் வந்து உன்னை பலாத்காரம் செய்யப்போகிறோம். காஸாவில் செய்தது போல் உன்னை வெட்டுவோம்!” என அவர் மிரட்டியுள்ளார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்