மீண்டும் 49.3!
14 மார்கழி 2023 வியாழன் 14:53 | பார்வைகள் : 5512
பிரதமர் Élisabeth Borne இன்று 21 ஆவது தடவையாக 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தினார். பல்வேறு விமர்சனங்களுக்குள் சிக்கியுள்ள மக்ரோனின் அரசு, மீண்டும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை (loi de finances) நிறைவேற்றுவதற்காக இந்த அரசியலமைப்ப்உ சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். பிரதமர் Élisabeth Borne இதுவரை 20 தடவைகள் இதனை பயன்படுத்தியிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை மீண்டும் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தியுள்ளார்.
49.3 என்பது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சட்டம் ஒன்றை நிறைவேற்றக்கூடிய அரசியலமைப்பு சட்டமாகும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிராத மக்ரோனின் அரசு தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் இந்த 49.3 இனை பயன்படுத்தினார். அதையடுத்து La France insoumise கட்சியினர் மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதாக அறிவித்தது.