14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற மோடி
15 மார்கழி 2023 வெள்ளி 09:37 | பார்வைகள் : 2092
ராஜ்யசபாவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் நேற்று எழுத்து வாயிலாக அளித்த பதிலில் தெரிவித்திருந்ததாவது:
கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளார்.
பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும்.<br><br>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.