Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க திட்டம்!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க திட்டம்!

15 மார்கழி 2023 வெள்ளி 05:36 | பார்வைகள் : 4173


இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 எதிர்வரும் 06 மாதங்களில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்