Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் பொருளாதாரம் 1.6% நேர் விகிதத்தில் வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 1.6% நேர் விகிதத்தில் வளர்ச்சி

16 மார்கழி 2023 சனி 02:47 | பார்வைகள் : 12091


2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.2,946.1 பில்லியனாக பதிவாகியுள்ளது.

2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900.6 பில்லியன் வருமானம் பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 46 பில்லியன் வருமானம் மேலதிகமாக பெறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 1.6% ஆக பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாயம், தொழில்துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 3.0%, 0.3% மற்றும் 1.3% ஆக விரிவடைந்தாகவும் புள்ளியியல் திணைக்களம் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்