Yvelines : இளம் ஜொந்தாம் வீரர் ஒருவர் தற்கொலை!!

17 மார்கழி 2023 ஞாயிறு 17:51 | பார்வைகள் : 4853
26 வயதுடைய இளம் ஜொந்தாம் வீரர் ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டிசம்பர் 16, நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Yvelines நகரில் வசிக்கும் குறித்த இளம் ஜொந்தாம் வீரரது சடலம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பலியாகியுள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.