வன்முறை : இல் து பிரான்சுக்கு 11 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு!
19 மார்கழி 2023 செவ்வாய் 16:45 | பார்வைகள் : 4544
நஹேல் எனும் இளைஞன் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் அதைடுத்து நாடு முழுவதும் இரவு நேரங்களில் பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவானதும் அறிந்ததே. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக இல் து பிரான்சைச் சேர்ந்த 41 நகராட்சிகளுக்கு (communes ) 11.3 மில்லியன் யூரோக்கள் நிதி வழங்கப்பட உள்ளது. கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டும், தீ வைத்து எரிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டிருந்த சிறு தொழில்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, பல பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்த நிலையில், இல் து பிரான்ஸ் மாகாணசபை தனது நிதியில் இருந்து 20 மில்லியன் யூரோக்களை பகிர்ந்து அளித்திருந்தது.
**
இவ்வருடன் ஜூன் 27 ஆம் திகதி Nanterre நகரில் வைத்து குறித்த நஹேல் எனும் இளைஞன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்ததுடன், காவல்துறை வீரர் ஒருவரை மோதி தள்ள முற்பட்ட வேளையில், சக காவல்துறை வீரர் ஒருவர் நஹேலை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து, இவ்வாருடத்தின் கோடைகாலம் முழுவதும் இரவு நேரம் வன்முறை களியாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. எண்ணற்ற வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும், 30 வரையான பொது போக்குவரத்து பேருந்துகள் எரிக்கப்பட்டும் இருந்தன.