பிரான்சில் உள்ள மிக அழகான பெண் நான் இல்லை! - விமர்சனங்கள் குறித்து மிஸ் பிரான்ஸ்!!

19 மார்கழி 2023 செவ்வாய் 18:30 | பார்வைகள் : 9100
2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள Eve Gilles மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகிறது. அவரது உடல்வாகு மற்றும் தலைமுடி தொடர்பாகவும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Eve Gilles, தன்மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ளார். " நான் மிகவும் இருள் சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளேன். சிறு வயது முதலே கனவுகளுடன் வாழ்ந்தவள் நான். சிறிய சிறிய போட்டிகளும், மேடைகளும் எனக்கு மேலும் நம்பிக்கை ஊட்டின. எனக்கு தெரியும். பிரான்சில் உள்ள மிகவும் சிறந்த அழகி நான் இல்லை. ஆனால் மிஸ் பிரான்சாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது திறமை பன்முகத்தன்மை உடல் அமைப்பினால் வருவதில்லை என நான் நம்புகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்!' என அவர் தெரிவித்தார்.
பிரான்சில் ஆண்டுதோறும் இடம்பெறும் மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டியில் முதன் முறையாக நீண்ட கூந்தல் இல்லாத பெண் ஒருவர் வெற்றி பெறுவது இது முதன் முறையாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1