வீடற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் கல்லூரியின் முன் இரவைக் கழிக்கிறார்கள்.
19 மார்கழி 2023 செவ்வாய் 19:13 | பார்வைகள் : 10698
வீதியில் வாழ்வைக் கழிக்கும் 12 வயது, மற்றும் 14 வயது தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, ஏனைய வீதியில் வாழும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து, அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு மனிதாபிமான போராட்டத்தை Strasbourg நகரில் உள்ள 'Lezay Marnesia' கல்லூரிப் பேராசிரியர்கள், டிசம்பர் 18ம் திகதி இரவும், இன்று 19ம் இரவும் நடத்துகின்றனர்.
-2 டிகிரி செல்சியஸ் காலநிலையில் தங்கள் கல்லூரிகளுக்கு முன்பு, வீடற்றவர்கள் அமைத்து தங்கும் கூடாரங்கள் போல் தாமும் கூடாரங்கள் அமைத்துத் தங்கி பேராசிரியர்கள் இந்த நூதனமான மனிதாபிமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கணிதப் பேராசிரியர் Loïc Klenkle கூறும் போது "எங்கள் வீடற்ற மாணவர்களில் தலைக்கு மேல் நாங்கள் ஒரு கூடாரம் அமைக்கும் போராட்டம் இது, நாங்கள் அவர்களின் வேதனையை அனுபவித்து ஆறுதல் கூறுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பானிஷ் மொழி பேராசிரியர் Agathe Bertrand கூறும் போது.. "நாங்கள் இரவில் வெளியே குளிரில் தங்கினாலும் மனதில் எங்களுக்கு சூடான வீடு இருக்கிறது எனும் உறுதி குளிரையும் சூடாக்குகிறது, ஆனால் இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் குளிர் வாழ்க்கை " என்று கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் வீதிகளில் தங்கும் மாணவர்கள் படும் கஷ்டங்களை நாட்டிற்கு, அரசுக்கும் சொல்லும் இந்த போராட்டத்தை பல செய்தி ஸ்தாபனங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan