Paristamil Navigation Paristamil advert login

49.3 - அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன..?!!

49.3 - அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன..?!!

22 மார்கழி 2023 வெள்ளி 08:27 | பார்வைகள் : 3939


அண்மைய நாட்களில் 49.3 எனும் இலக்கம் மிகவும் பிரபலமடைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் Elisabeth Borne தலமையிலான அரசாங்கம் இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறது. 49.3 என்றால் என்ன..? ஏன் அதனை பயன்படுத்துகிறார்கள்..??

பிரான்சில் சட்டம் ஒன்றை அல்லது சட்ட சீர்திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு மூன்று கட்ட மன்றங்களைச் சந்திக்கவேண்டும். முதலில் பாராளுமன்றம். (Assemblée Nationale) பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு, ஆராயப்பட்டு சபாநாயகரால் வாக்கெடுக்கப்பட்டு அதன் பின்னரே சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அங்கிருந்து நேரே அது செனட் மேற்சபைக்குச் ( French Senate) செல்லும். அங்கு செனட் மேற்சபை உறுப்பினர்கள் இதனை ஆராய்ந்து, நாட்டின் நலனை அது எவ்வாறு பாதிக்கும், எவ்வாறு நன்மை செலுத்தும் என ஆராய்ந்து, அதில் நீக்க வேண்டிய அனைத்தையும் நீக்கிவிட்டு, மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பும்.

செனட் சபையினரால் திருத்தப்பட்ட அந்த சட்டம் மீண்டும் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இப்போது ‘பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை’க்குச் (Conseil constitutionnel) செல்லும். அங்கும் குறித்த சட்டம் கலந்தாலோசிக்கப்பட்டு, பிரான்சின் சட்டப்புத்தகத்தில் இணைத்துக்கொள்ளப்படும்.

 

இதி எங்கு 49.3 வருகிறது.??

”Article 49” வரைவின் ஒரு பிரிவு தான் 49.3 ஆகும். ‘வரைவு 34 இல் இருந்து 51 வரை” பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து விபரிக்கிறது. அதில் மிக முக்கியமானது இந்த 49 வரைவு மற்றும் 49.3 ஆகும். நான்காம் குடியரசில் இருந்த பல சிக்கல்களுக்கு தீர்வுகாண,இந்த வரைவு ஐந்தாம் குடியரசினால் உருவாக்கப்பட்டது.

”மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஜனாதிபதி பெரும்பான்மையை கொண்டிராத அரசாங்கத்தைக் கொண்டிருந்தால்...”  இந்த 49 வரைவு செயற்பாட்டுக்கு வரும். 

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குகள் அளிக்கப்படாமல் சட்டம் ஒன்றையோ அல்லது சட்டச் சீர்திருத்தம் ஒன்றையோ நிறைவேற்ற இந்த 49.3 இனை பயன்படுத்த முடியும். அதேவேளை, 49.3 இனை பயன்படுத்தினால், அந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) கொடுவரமுடியும். அவ்வாறு நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் குறித்த அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும் என்பதே இந்த வரைவு ஆகும்.

****

பிரான்சில் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை ஒரே ஒரு முறை மட்டும் Georges Pompidou பிரதமராக இருந்த போது அவர் மீது 1962 ஆம் ஆண்டு 49.3 கொண்டுவரப்பட்டு அவர் பதவி விலக வேண்டி இருந்தது. பின்னர் அடுத்து இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலின் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தார்.

****

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மக்ரோன் 58.5% சதவீத வாக்குகுகளையும், மரீன் லு பென் 41.5% சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். இம்மானுவல் மக்ரோன்

​​​​

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்