Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் உடன் மோதலை தவிர்க்கிறாரா ரஜினி...

தனுஷ் உடன் மோதலை தவிர்க்கிறாரா ரஜினி...

22 மார்கழி 2023 வெள்ளி 10:54 | பார்வைகள் : 5583


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் ரஜினியை வைத்து தான் இப்படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. லால் சலாம் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

லால் சலாம் படத்துக்கு போட்டியாக மேலும் மூன்று திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர். மற்றொன்று சிவகார்த்திகேயனின் அயலான், இன்னொரு படம் விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள பான் இந்தியா படமான மெரி கிறிஸ்துமஸ். இப்படி நான்கு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்பதால் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என தியேட்டர்காரர்களே குழம்பிப் போய் இருந்தனர்.

இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் வசூல் பாதிக்கும் என்பதை மனதில் வைத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அப்படத்தை ஜனவரி 26-ந் தேதி ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறார். ஏற்கனவே அன்றைய தினம் வெளியாக இருந்த தங்கலான் படம் தள்ளிப்போனதால் லால் சலாம் அந்த தேதியை லாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்