Paristamil Navigation Paristamil advert login

Gmailயில் மின்னஞ்சல் வருவதில் உள்ள சிக்கலை தீர்க்க 5 டிப்ஸ்

Gmailயில் மின்னஞ்சல் வருவதில் உள்ள சிக்கலை தீர்க்க 5 டிப்ஸ்

23 மார்கழி 2123 வியாழன் 08:05 | பார்வைகள் : 883


மின்னஞ்சல்கள் inbox-யில் வருகிறதா என்று நினைத்து குழம்புபவர்களுக்கு இந்த ஐந்து டிப்ஸ் உதவும்.

முதலில் நீங்கள் உங்களது மின்னஞ்சல்கள் Archived செய்யப்பட்டதா, நீக்கப்பட்டதா அல்லது Spam எனக் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

ஏனெனில், தற்செயலாக Archive ஆகுதல், Delete செய்தல் அல்லது Spam எனக் குறிக்கப்பட்டதன் காரணமாக, உங்கள் Mails இன்பாக்சில் வராமல் இருக்கலாம்.

இதுமட்டும் அல்லாமல் காணாமல்போன அனைத்து மின்னஞ்சல்களையும் தேடுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்யுங்கள். 

உங்கள் System-யில் Gmail-ஐ திறக்கவும். பின் Search Bar-யில் கீழ் அம்புக் குறியைக் Click செய்து, Drop down பாக்சில் இருந்து ''Mail, Spam மற்றும் Trash'' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் விடுபட்ட மின்னஞ்சல்கள் குறித்த தகவலை உள்ளிட்டு, Search என்பதை Click செய்யவும்.

குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தானாக Archive செய்யும் அல்லது நீக்கும் Filterகளை நீங்கள் உருவாக்கியுள்ளீர்களா என சரி பார்க்கவும்.

இப்போது Gmail-யில் Settings என்பதை Click செய்து See All Settings என்பதை தேர்வு செய்யவும்.

பின்னர் Filters மற்றும் Blocked Email address என்பதை பார்க்கவும்.

அங்கு 'Delete it' அல்லது 'Stop it' என்று இருந்தால், அதை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். 

Gmailஐ திறந்து Settingsக்கு சென்று அனைத்து அமைப்புகளையும் பார்க்கவும்.

Forwarding மற்றும் POP/IMAP option-ஐ Click செய்யவும். அவை Activate செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்து, அப்படி செய்யப்பட்டிருந்தால், Keep Gmail's copy in Inbox என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். 

Microsoft Outlook அல்லது ஆப்பிள் Mail போன்ற மற்றொரு Client-யில் Gmail மின்னஞ்சல்களைப் படித்தால், அதற்கு ஏற்றவாறு உங்கள் Settings மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

இந்த Client-களால் உங்கள் Gmail inbox எப்போதும் பாதிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

உங்கள் Gmail Settings-யில் இடையூறு விளைவிக்கும் இணைக்கப்பட்ட செயலிகள் அல்லது தளங்களை சரிபார்க்கவும்.

Connected apps and Sites Page-ஐ visit செய்யவும். பின், Apps connected to யுவர் account என்ற option-க்கு சென்று Manage Apps என்பதை Click செய்யவும்.

மேலும், அறிமுகமில்லாத அல்லது அங்கீகரிக்கப்படாத சேவைகளை அகற்றவும்.

உங்கள் கூகுள் கணக்கில் போதுமான Free Storage உள்ளதா என்பதை பார்க்கவும். இதன் காரணமாக கூட புதிய மின்னஞ்சல்கள் வராமல் இருக்கலாம்.

எனவே, Storage நிரம்பியிருந்தால் தேவையற்ற கோப்புகளை அகற்றி சேமிப்பகத்தின் இடத்தை காலியாக வைத்திருங்கள்.

கூடுதல் சேமிப்பகம் தேவைப்பட்டால், சாந்த முறையில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்