இலங்கையில் தொலைபேசிகளின் விலை அதிகரிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்கம்
26 மார்கழி 2023 செவ்வாய் 03:09 | பார்வைகள் : 14406
இலங்கையில் தொலைபேசிகளின் விலை அடுத்த மாதத்தில் இருந்து 18 சதவீதத்தால் அதிகரிக்கும் என தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவது இதற்கு பிரதான காரணமாகும் என அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொலைபேசி இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச தொலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களுடன், இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், சட்டவிரோத தொலைபேசி இறக்குமதி காரணமாக 3.1 பில்லியன் ரூபாய் வரி வருமானம் தற்போது இழக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை எதிர்காலத்தில் 11.9 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என குறித்த கலந்துரையாடல்களில் தெரியவந்துள்ளது.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாமல் சந்தையில் உள்ள தொலைபேசிகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டுள்ளன.
இந்தநிலைமையை, கருத்திற் கொண்டு குறைந்த விலைகளில் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர்கள் போலி சந்தைகளை நாடுவார்கள் என கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan