இஸ்ரேல் காசா மீது மேற்கொண்ட தாக்குதல் - 241 பேர்பலி
27 மார்கழி 2023 புதன் 07:37 | பார்வைகள் : 2744
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 382 பொதுமக்கள் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் காயமடைந்து இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை தனது மக்களுக்கு எதிரான “கடுமையான குற்றம்” என கண்டித்துள்ளார்.
அமைச்சகத்தின் தகவல்படி, 11 வார மோதலில் இதுவரை பாலஸ்தீனத்தில் 20,915 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்ஸி ஹலேவி, ஹமாஸ் படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பல மாதங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிழமை மட்டும் 100 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.