பழக்கடை வியாபாரிக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்

27 மார்கழி 2023 புதன் 12:38 | பார்வைகள் : 6120
சீனா - ஷாங்காய் நகரில் பழக்கடைக்காரர் ஒருவருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
மா என்ற முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது.
மா என்ற முதியவரின் மகன் உயிரிழந்து விட அதன்பின்னர் அவரை, லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.
முதியவருக்கு உறவினர்கள் இருந்தபோதிலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் முதியவர் மா உயிரிழக்கும் வரையிலும் லியூ அவரை பத்திரமாக கவனித்துக் கொண்டார்.
இந்நிலையில் முதியவர் உயிரிழந்து விட, அவர் எழுதி விட்டு சென்ற உயிலைப் பார்த்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதாவது தனக்கு சொந்தமான ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை, தன்னை கவனித்துக் கொண்ட லியூ பேருக்கு முதியவர் மா எழுதி விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அனைவரும் பழக்கடைக்காரருக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.
2020ஆம் ஆண்டே, முதியவர் மா தனது வீட்டை எழுதி தந்து விட்டதாக பழக்கடைக்காரர் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.
இதேவேளை குறித்த வாடிக்கையாளருக்கு மூன்று சகோதரிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025