Paristamil Navigation Paristamil advert login

சிவாஜி குடும்பத்தின் மருமகன் ஆகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?

சிவாஜி குடும்பத்தின் மருமகன் ஆகிறாரா  ஆதிக் ரவிச்சந்திரன்?

28 கார்த்திகை 2023 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 4516


சமீபத்தில் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர், சிவாஜி குடும்பத்தில் மருமகன் ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளை திருமணம் செய்ய போவதாகவும் இந்த திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 15ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தரப்பிலும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

’மார்க் ஆண்டனி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்