இலங்கையில் தனிநபர் கடன் சுமை அதிகரிப்பு!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 5557
இலங்கையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே, நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் ஊடக சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது தனிநபர் கடன் சுமை அதிகரிப்புக்கு 90 சதவீதம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.