ஜனாதிபதி மக்ரோன் மீது துவேச வார்த்தைகள்!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 12539
Lunas (Hérault) நகர சபைக் கட்டிடத்தின் முன்பாக ஸ்வாஸ்திகா இலட்சணைகளையும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீதான துவேச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை நகரசபை ஊழியர்கள் இதனை பார்வையிட்டதோடு, காவல்துறையினரையும் அழைத்துள்ளனர். நாஸி படையினரின் இலட்சணையான ஸ்வாஸ்திகா வரையப்பட்டும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை அவமதிக்கும் வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தது.
அவை உடனடியாக அழிக்கப்பட்டதுடன், ஜொந்தாமினர் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனை எழுதியவர் தேடப்பட்டு வருகிறார்.
Lunas நகர முதல்வர் Aurélien Manenc, இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வழக்கு பதிவு செய்தார். “இதுபோன்ற சம்பவங்களுக்கு லுனாஸ் நகரில் மட்டுமல்ல, பிரான்சில் வேறு எங்கேயும் இடமில்லை!” என அவர் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1