Paristamil Navigation Paristamil advert login

செனேகல் : சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு பெண் - உண்ணாவிரதப் போராட்டம்!

செனேகல் : சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு பெண் - உண்ணாவிரதப் போராட்டம்!

29 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 4061


மேற்கு ஆபிரிக்க நாடான செனேகலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரெஞ்சுப் பெண் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Coline Fay எனும் 26 பெண் ஒருவரே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். Isère நகரவாசியான அப்பெண் செனேகலில் நீண்ட நாட்களாக மருத்துவத்துறையில் பணியாற்றிவருகிறார். அங்கு பிரபல எதிர்க்கட்சித் தலைவரான Ousmane Sonko உடன் இணைந்து அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த நவம்பர் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று நவம்பர் 28 ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அங்கு வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளது. எதிர்கட்சித்தலைவராக உள்ள Ousmane Sonko, அரசியல் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இணைந்து Coline Fay ம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Ousmane Sonko பெப்ரவரி மாதம் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்