தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்றுங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 மார்கழி 2023 வெள்ளி 06:58 | பார்வைகள் : 2148
வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது.
விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்கு சென்னை மக்கள் 1913, 044-25619204, 044- 25619206, 044- 25619207 ஆகிய எண்களிலும், 94454- 77205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்' என்று அவர் கூறி உள்ளார்.