Paristamil Navigation Paristamil advert login

ரூ.250 கோடி பண மோசடி: அமலாக்கத் துறை சோதனை

 ரூ.250 கோடி பண மோசடி: அமலாக்கத் துறை சோதனை

1 மார்கழி 2023 வெள்ளி 12:10 | பார்வைகள் : 1720


ஜம்மு -- காஷ்மீரில், 250 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஹிலால் மிர் என்பவர், ஜுலம் நதி கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தை துவக்கினார். இந்த சங்கத்துக்கு கடன் வழங்கும்படி, ஜம்மு - காஷ்மீர் கூட்டுறவு சங்கத்திடம் கடந்த 2020ல் விண்ணப்பித்தார். 

அவர் வழங்கிய ஆவணங்களை சரிபார்க்காமல் கூட்டுறவு வங்கியின் அப்போதைய தலைவர் முஹமது ஷபி தார், 223 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

விசாரணையில், மிர் போலியான பெயரில் வீட்டு வசதி வாரிய சங்கம் துவக்கி பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இதற்கு கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் முஹமது ஷபியும் உடந்தையாக இருந்தது அம்பலமானது. 

அவர்கள் இருவர் உட்பட பல்வேறு நபர்கள் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ளகூட்டுறவு வங்கி, அதன் முன்னாள் தலைவர் முஹமது ஷபியின் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்கிய நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில், அவர்களுக்கு சொந்தமான 187 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்