தீவிர வலதுசாரியினர் முன்னெடுக்க உள்ள ஆர்ப்பாட்டம்! - தடை விதித்த பரிஸ் காவல்துறை!!
1 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 2920
நாளை (டிசம்பர் 2) பரிசில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி தடை விதித்துள்ளார்.
”Les Natifs” என பெயரிடப்பட்டுள்ள தீவிர வலது சாரி சிந்தனையுள்ள சிறிய குழு ஒன்றே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசாங்கத்துக்கு எதிரான சிந்தனைகள் கொண்ட குறித்த குழுவினரின் நடவடிகைகளை கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்கார்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில், அண்மையில் Crépol (Drôme) எனும் கிராமத்தில் வன்முறையில் கொல்லப்பட்ட தோமஸ் எனும் 16 வயது சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவித்தனர்.
பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.