இண்டியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்: சீதாராம் யெச்சூரி
1 மார்கழி 2023 வெள்ளி 16:55 | பார்வைகள் : 2000
இண்டியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஐந்து மாநில தேர்தல் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தெலுங்கானாவிலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் பா.ஜ., என கணிப்பு முடிவுகள் பகிர்ந்து இருக்கும் படியாக இருக்கின்றது.
கடந்தாண்டு 40,000 கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடியுள்ளன. அவைகள் வரி செலுத்தவில்லை.
வேலையிழப்பு அதிகளவில் இந்தியாவில் உள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58 சதவீத இந்தியர்கள் பணி செய்பவர்களாக உள்ளனர்.
வருகிற பார்லி., தேர்தலிலும் இந்த பிரச்னை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர்.
மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது
ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிப்பதாகவும், முன்னிலை வகிப்பதாகவும் பிம்பம் உருவாக்கப்பட்டது.
ஆனால், ஜி.டி.பி.,யில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது. யுனஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மிகவும் தீவிரமான பிரச்னை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காக இந்தியாவிற்காக பா.ஜ., வீழ்த்தப்பட வேண்டும்.
5 மாநில தேர்தல் பணி முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், பார்லி., தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எல்லா கருத்து கணிப்பு முடிவுகளும் பா.ஜ.,விற்கு சாதகமாக இல்லை.
சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இண்டியா கூட்டணி பார்லி., தேர்தலில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.
அமலாக்க துறை, சி.பி.ஐ., போன்றவற்றை மத்திய அரசு மிரட்டலுக்கு பயன்படுத்துகிறது. 8 மசோதாக்களை 3 ஆண்டுகளாக கேரளா கவர்னர் நிறுத்தி வைத்திருக்கின்றார்.
கவர்னர்களை வைத்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த வேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.