SMIC : புதிய வருடத்தில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கலாம்..
1 மார்கழி 2023 வெள்ளி 09:00 | பார்வைகள் : 4715
அடிப்படைச் சம்பளம் (salaire minimum) வரும் ஜனவரி 1 ஆம் திகதி அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு அடிப்படைச் சம்பளம் குறைந்தது 1.7% சதவீதத்தினால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ₤1,383 யூரோக்களுக்காக உள்ள அடிப்படைச் சம்பளம் ₤23 யூரோக்கள் அதிகரித்து ₤1,406 யூரோக்களாக உயவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படைச் சம்பளம் ஏழு தடவைகள் கணக்கிடப்பட்டு அதிகரிப்புக்குளாகியிருனது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து அடிப்படைச் சம்பளம் 13.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.