Paristamil Navigation Paristamil advert login

குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₤1,330 யூரோக்கள் வரை அவசர நிதி உதவி!!

குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₤1,330 யூரோக்கள் வரை அவசர நிதி உதவி!!

1 மார்கழி 2023 வெள்ளி 15:00 | பார்வைகள் : 3684


குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் நபர்கள் இன்று டிசம்பர் 1 ஆம் திகதி முதல் அவசரகால நிதி உதவி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைகள், பிள்ளைகளின் எண்ணிக்கை என்பவற்றை கருத்தில் கொண்டு ₤240 யூரோக்களில் இருந்து ₤1,330 யூரோக்கள் வரை உதவித்தொகை பெற முடியும். இந்த தொகை வட்டி எதுவும் இல்லாமல் d'allocations familiales தொகையில் இருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற குறைந்தது ஒருவருட காலம் குடும்பமாக வசித்திருத்தல் வேண்டும் எனவும், குடும்ப வன்முறை காரணமாக துணை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் இருந்து அவசரமாக பிரிதல், வீட்டை விட்டு வெளியேறுதல், வேறு தங்குமிடத்தினை பெற்றுக்கொள்ளுதல், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்தல் போன்ற அவசர காரணங்களுக்காக இந்த தொகை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த கடந்த பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டு, பெருமளவான ஆதரவு வாக்குகள் பெறப்பட்டு தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்