Paristamil Navigation Paristamil advert login

கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை - தமிழ் மொழிமூல பாடசாலை முதலாம் இடம்!

கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை - தமிழ் மொழிமூல பாடசாலை முதலாம் இடம்!

1 மார்கழி 2023 வெள்ளி 12:42 | பார்வைகள் : 2421


வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 13 ஆயிரத்து 588 பேர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, கண்டி மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன், பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலை தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

இதுதவிர, கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்