Paristamil Navigation Paristamil advert login

கமலின் 'தக்ஃலைப்' படத்தின் மாஸ் தகவல்..!

கமலின் 'தக்ஃலைப்' படத்தின் மாஸ் தகவல்..!

3 மார்கழி 2023 ஞாயிறு 11:42 | பார்வைகள் : 4451


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்ஃலைப்’ படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி பிரமிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை ஹீரோ இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் ‘தக்ஃலைப்’ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்து உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் இணையும் நடிகர்களின் தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா நாயகி ஆக நடிக்கும் இந்த கூட்டத்திற்கு ஏஆர் ரகுமான் இசை உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில், அன்பறிவ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்