இந்தோனேசியாவில் திடீர் கறுப்பு புகை மூட்டம்

4 மார்கழி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 11716
இந்தோனேசியாவின் செயலில் உள்ள 127 எரிமலைகளில் ஒன்றான மராபி மலை, ஞாயிற்றுக்கிழமை 9,800 அடி உயரத்திற்கு வெடித்தது.
இதன்போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்துள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை 3 பேர் மீட்கப்பட்டனர்.
சிறு வெடிப்பு காரணமாக காணாமல் போன 12 பேரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மலையேறும் 11 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட மூன்று பேரும் பள்ளத்தின் அருகே காணப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்ட வந்துள்ளனர்.
இதையடுத்து, அதிக வெப்பம் இருந்து காரணத்தால் சிலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் எரிமலை சாம்பலால் கார்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1