Paristamil Navigation Paristamil advert login

நியூயார்க்கில் கத்திக் குத்து தாக்குதல்... குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

 நியூயார்க்கில் கத்திக் குத்து தாக்குதல்... குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

4 மார்கழி 2023 திங்கள் 07:19 | பார்வைகள் : 3251


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வீடு ஒன்றில் நடத்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நியூயார்க்கின் குயின்ஸ் நகரின் ஃபார் ராக்வே சுற்றுப்புறத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் தனது குடும்ப உறுப்பினர்களை தாக்கி கொல்வதாக பொலிஸாருக்கு 911ல் அவசர அழைப்பு கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்தை ஆராய இரண்டு பொலிஸார் அனுப்பப்பட்ட நிலையில், தீ வைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்ட வீட்டை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட உள்ளே சென்ற போது, ஆண் ஒருவர் பொருள்களுடன் வெளியேறுவதை பார்த்துள்ளனர்.

உடனே அவரை தடுத்து பேச முயன்ற போது, அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் 2 பொலிஸ் அதிகாரிகளையும் குத்தியுள்ளார். 

இதனால் 2 பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுக் வீழ்த்தியுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சென்ற பிறகு அவசர சேவைகள் வீட்டிற்குள் இருந்து 12 வயது சிறுவன், 44 வயது பெண் மற்றும் 30 வயது ஆண் ஆகிய 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன் வாசலில் காயங்களுடன் நின்ற 11 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியவர் 39 வயதான கோர்ட்னி கார்டன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்