ஈஃபிள் கோபுரத்துக்கு சிறப்பு பாதுகாப்பு!!
4 மார்கழி 2023 திங்கள் 10:00 | பார்வைகள் : 4168
ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்டது, பரிசில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மிகுந்த நெருக்கடியான பகுதியை தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளமை தற்செயலானது இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை தலைமை அதிகாரி, ஈஃபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை பாதுகாக்க மேலும் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதும் அதி உச்சப் பாதுகாப்பு கொண்டுவரப்படும் என பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் உலகம் முழுவதும் உள்ள ஒலிம்பிக் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களை அச்சுறுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.