Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைகிறாரா?

தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைகிறாரா?

4 மார்கழி 2023 திங்கள் 15:50 | பார்வைகள் : 8840


நடிகர் தனுஷ் போட்டுள்ள எமோஷனல் ட்வீட் ஒன்று அவர் மனைவியுடன் மீண்டும் இணைய தூது அனுப்புகிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், இரண்டு பேரும் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தரப்பில் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என அதிக முயற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது பலனளிக்காத நிலையில் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் தனுஷூடனும் ஐஸ்வர்யா உடனும் நேரம் செலவழித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இவர்களது பள்ளி விழாவில் தனுஷ்- ஐஸ்வர்யா இரண்டு பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் தனுஷ் எமோஷனலாக பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்திருந்த படம் '3'. இந்த படத்தின் மூலமாக தான் ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் கதையும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக அனிருத்தின் இசை திரைத்துறையில் புது பாய்ச்சல் நிகழ்த்தியது.

படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் இந்தப் படம் ரீ- ரிலீஸ் ஆனது. படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை பார்த்த நடிகர் தனுஷ், 'திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. உங்கள் அன்பிற்கு நன்றி' என ட்வீட் செய்து உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தனுஷ் இன்னும் மறக்கவில்லை எனவும், அதனால்தான் இப்படி ஒரு எமோஷனல் பதிவிட்டுள்ளார். அவருடன் மீண்டும் இணைய தூது அனுப்புகிறாரா என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்