Paristamil Navigation Paristamil advert login

துப்பறிவாளன் 2 படத்துகு மீண்டும் உயிர் கொடுக்கும் விஷால்…!

துப்பறிவாளன் 2 படத்துகு மீண்டும்  உயிர் கொடுக்கும் விஷால்…!

4 மார்கழி 2023 திங்கள் 15:48 | பார்வைகள் : 2157


விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வரும் விஷால் இந்த படத்தை முடித்துவிட்டு உடனடியாக துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளை விஷால் தொடங்கியுள்ளதாகவும், படத்தில் நடிக்க சில பாலிவுட் நடிகர்களை பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்