Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு ... பீதியில் மக்கள்

அமெரிக்க தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு ... பீதியில் மக்கள்

5 மார்கழி 2023 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 5477


அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சத்தத்தை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். 

துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த வீட்டிற்குள் இருந்த சந்தேக நபர் பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதையடுத்து அந்த வீட்டில் குண்டு வெடித்துள்ளது.  

பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ கிளம்பியுள்ளது. இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.

குண்டு வெடித்ததில் அந்த வீடானது முற்றிலும் இடித்து விழுந்துள்ளது. 

சம்பவம் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். 


இந்நிலையில் அந்த வீட்டிக்குள் இருந்த சந்தேக நபர் தப்பி ஓடினாரா அல்லது உயிரிழந்தாரா என்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சந்தேக நபர் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து பொலிஸார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்