Paristamil Navigation Paristamil advert login

போலி தரிப்பிட குற்றப்பணம்! - அவதானம் மக்களே!!

போலி தரிப்பிட குற்றப்பணம்! - அவதானம் மக்களே!!

6 மார்கழி 2023 புதன் 14:42 | பார்வைகள் : 4446


போலியாக தயாரிக்கப்பட்டு வாக சாரதிகளிடம் தரிப்பிட குற்றப்பணம் அறவிடும் கும்பல்களினால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் இடம்பெற்று வருகிறது.

தரிப்பிட குற்றங்களுக்கான உங்கள் வாகனங்கள் மீது டிக்கெட் (contravention) வைக்கப்பட்டிருந்தால், ஒன்றுக்கு இரண்டு தடவைகள் அது உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்தும்படி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த பற்றுச்சீட்டில் 35 யூரோக்களில் இருந்து 135 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்படுவதாகவும், பணத்தினைச் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கும் QR குறியீயினை அழுத்தவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் QR குறியீடினை அழுத்துவதை அடுத்து வங்கி தரவுகள் கோரப்படும். பின்னர் பணம் வங்கிகளில் இருந்து பெறப்படும்.

இந்த ஏமாற்று வேலையில் இருந்து தப்பித்துக்கொள்ள நீங்கள் சில தகவல்களை தெரிந்துகொண்டிருந்தாலே போதுமானது. முதலில் அவசரப்பட்டு உடனடிக பணம் செலுத்த தேவையில்லை. பொறுமையான வீட்டுக்குச் சென்று ஆராய்ந்து பார்த்து பணத்தை செலுத்த முடியும்.

உங்கள் நகரங்களில் தரிப்பிட குற்றப்பணம் எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு Toulouse நகரில் வசிக்கும் பெண் ஒருவர் 35 யூரோக்களை குற்றப்பணமாக செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு அடிப்படை குற்றப்பணம் 30 யூரோக்களாகும்.

135 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த வழங்கப்படும் அவகாசம் இரண்டு நாட்கள் இல்லை. இந்த போலி பற்றுச்சீட்டில் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்காணித்திருக்கின்றனர்.

அதேபோல் இந்த போலி பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையத்தளத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு "Il est primordial de régulariser cette situation le plus rapidement" (இந்த பணத்தொகை மிக விரைவாக செலுத்தப்பட வேண்டும்!) போன்ற அறிவுறுத்தல்கள் உண்மையான நிர்வாக அமைப்பு அல்லது தரிப்பிட கட்டிடங்களை அறவிட வழங்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் வெளியிடுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்