பரிசின் பயங்கவாதி தீவிரவிசாரணையில் - இஸ்ரேலிற்குப் பதிலடியாகத் தாக்குதல்!!
6 மார்கழி 2023 புதன் 19:45 | பார்வைகள் : 5031
கடந்த சனிக்கிழமை பிலிப்பைன்சைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி குடியுரிமை பெற்றவருமான, ஒரு இளம் உல்லாசப் பயணியைக் கொன்றதுடன், மேலும் இருவரைக் காயப்படுத்தித் தாக்குதல் நடாத்திய ஆர்மோன்.R (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைது செய்யப்பட்டு, இன்று புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இந்த நபரின் பெற்றோர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள். இவரின் மீது பரிசின் பயங்கவாதத் தடைப்பிரிவு, 'பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடன் கூடிய கொலை மற்றும் தாக்குதல் முயற்சி' என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் ஏற்கனவே சட்ட மறுபரிசீலனை நிலையில் இருக்கும் போதே, இந்தக் கொலை மற்றும் பலர் மீதான கொலைத் தாக்குதலும் மேற்கொண்டுள்ளார் எனவும் பயங்கரவாதத் தடைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவரது விசாரணையில், ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலிற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேய, இந்தத் தாக்குதலை நடாத்தியதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.