◉ SOLDES : ஆரம்பம்!!
10 தை 2024 புதன் 05:03 | பார்வைகள் : 5130
ஒவ்வொரு ஆண்டைப் போலவும் குளிர்கால மலிவு விற்பனை ‘SOLDES’ ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையான இன்று ஜனவரி 10 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
சில மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே விற்பனைகள் ஆரம்பித்துள்ளன. குறிப்பாக Meurthe-et-Moselle, Meuse, Moselle போன்ற மாவட்டங்களில் ஜனவரி 2 ஆம் திகதியே இந்த மலிவு விற்பனை ஆரம்பித்திருந்தது.
வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடைகள் போன்றவை பிரதானமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 10% இல் இருந்து 70% சதவீதம் வரையான விற்பனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விற்பனை செய்யப்பட்ட பொருட்களை, ஆடைகளை மாற்றுவது அல்லது இரத்துச் செய்து பணத்தை மீள கையளிப்பது தொடர்பில் வணிகர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள் எனவும் இந்த விற்பனைச் சட்டம் சொல்கிறது. (நுகர்வோர் வரைவு Article L112-1-1)
பெப்ரவரி 6 ஆம் திகதி வரை இந்த விற்பனை இடம்பெறும்.