Paristamil Navigation Paristamil advert login

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

11 தை 2024 வியாழன் 12:46 | பார்வைகள் : 2563


2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் இலங்கை 96 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

முதலிடத்தில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றன. 

இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டில் இருந்து 80 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது. 

பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் பின்தங்கியுள்ளன. 

இலங்கையின் அண்டை நாடுகளான மாலைத்தீவு 58 ஆவது இடத்திலும் சீனா 62 ஆவது இடத்திலும் பூட்டான் 87 ஆவது இடத்திலும் மியன்மார் 92 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 97 ஆவது இடத்திலும், நேபாளம் 98 ஆவது இடத்திலும் உள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த பட்டியலை  Henley Passport Index தயாரித்து வருகிறது. 

உதாரணமாக, இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடுகளின் கடவுச்சீட்டினை வைத்திருப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு கடவுச்சீட்டு மூலமாக 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். 

இவை அனைத்தும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

அமெரிக்க கடவுச்சீட்டானது கனடா மற்றும் ஹங்கேரி நாட்டு கடவுச்சீட்டுகளுடன் 7-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்