2023ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்
18 தை 2024 வியாழன் 09:16 | பார்வைகள் : 1571
உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது, சொல்லப்போனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை தான் மிக குறைவு என்று சொல்ல வேண்டும்.
இப்படி ஸ்மார்ட்போனின் தேவை அத்தியவசமாக மாறிவிட்ட சூழ்நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் வாடிக்கையாளரின் தேவை மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்து ஸ்மார்ட்போன் உலகை ஆண்டு வருகின்றனர்.
அப்படி, உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக ஆப்பிள், சாம்சங், ஒன் பிளஸ், சியோமி ஆகியவை உள்ளன.
இதில் கடந்த 12 ஆண்டுகளாக வாடிக்கையாளரின் மனங்களை கவர்ந்து அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் நிறுவனமாக சாம்சங் மகுடம் சூடி இருந்தது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடம் என்ற பெருமையை 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனம் இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
தரவுகளின் படி, 2023ம் ஆண்டில் ஆப்பிள் iPhone ஸ்மார்ட்போன்கள் 20.1 சதவீதம் விற்பனையாகி முதலிடம் பிடித்துள்ளது.
19.4 சதவீதத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.