Paristamil Navigation Paristamil advert login

புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் 7 போட்டியாளர்..!

புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் 7 போட்டியாளர்..!

21 தை 2024 ஞாயிறு 08:01 | பார்வைகள் : 867


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் பார்வையாளர்களிடம் இருந்து பெற்றவர்கள் மாயா மற்றும் பூர்ணிமா என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் மிகவும் திறமையானவர்கள் என்றாலும் சக போட்டியாளர்களை அவமதிப்பது, கேலி கிண்டல் செய்வது, அவர்களுடைய உணர்வில் விளையாடுவது, வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் செல்வது, ஒரு குரூப்பை அமைத்து கொண்டு குரூப்பில் உள்ளவர்களை பயன்படுத்திவிட்டு பின்னர் அவர்களையே கைவிட்டது போன்ற சீப்பான முடிவுகளை எடுத்ததால் இருவரும் பார்வையாளர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டனர்,

இருப்பினும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் பூர்ணிமா ரவிக்கு தான் முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்னும் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் பூர்ணிமா நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பே வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் பூர்ணிமா ரவி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஹரி மகாதேவன் என்பவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பூர்ணிமா ரவி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்