Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் 2023 குடியேற்ற வாசிகள் சாதனை, தொடர்ந்தும் அப்கானிஸ்தான் முன்னிலையில்.

பிரான்சில் 2023 குடியேற்ற வாசிகள் சாதனை, தொடர்ந்தும் அப்கானிஸ்தான் முன்னிலையில்.

23 தை 2024 செவ்வாய் 17:23 | பார்வைகள் : 4579


குடியேற்ற வாசிகளின் 2023 நிலமைகள் பற்றி இன்று அகதிகள் மற்றும் நாடற்ற நபர்களைப் பாதுகாப்பதற்கான பிரெஞ்சு அலுவலகமான 'Ofpra' வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அகதிகள் வரவு கடந்த ஆண்டில் 2023ல் உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டைவிடவும் 2023ல் குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை 8.6% வீதத்தால் அதிகரித்து உள்ளது. மொத்தமாக 142.500 குடியேற்ற வாசிகள், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்களைப் பாதுகாப்பதற்கான பிரெஞ்சு அலுவலகமான 'Ofpra' தம்மைப் பதிவுசெய்துள்ளார். இவர்களில் அப்கானிஸ்தான் ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. 17.500 அப்கானிஸ்தான் குடியேற்ற வாசிகள் அகதி விண்ணப்பங்களை சமர்பித்து உள்ளனர்.

அப்கானிஸ்தானைத் தொடர்ந்து பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும் (8,600), துருக்கி மூன்றாம் இடத்திலும் (8,500), காங்கோ ஜனநாயகக் குடியரசு நான்காவது இடத்திலும் (8,000)  கினியா குடியரசு ( 7,000). ஐந்தாம் இடத்திலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ், குடியேற்ற வாசிகளின் தெரிவு நாடாக அதிகம் இல்லை. பெரும்பாலான குடியேற்ற வாசிகள் பிரித்தானிய செல்வதற்கு பிரான்ஸ் தேசத்தை கடந்து செல்லும் பாதையாக பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்