விவசாயிகளிற்கு ஆதரவாக 94 சதவீத மக்கள்!!

23 தை 2024 செவ்வாய் 20:17 | பார்வைகள் : 5856
உள்நாட்டு விவசாய விளைச்சலை மறுதலித்து, வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்து, விவசாயிகளின் பெரும் போராட்டம் நடந்து வரும் நிலையில், பல ஊடகங்கள் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு, பிரெஞ்சு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அதற்கு எதிர்மாறாக மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சுத் தகமைகளை, பிரெஞ்சுத் தரநிலைகளை மதிக்காத விவசாயப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டாம் என, பிரெஞ்சு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிபரப்படி, 94 சதவீதமான மக்கள், இறக்குமதி விவசாயப் பொருட்களை எதிர்த்து, அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.