எங்களால் வாழமுடியவில்லை - விவசாயியின் அவலக்குரல்!!
23 தை 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 3505
தங்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் நோக்கில் அரசாங்கம் நடந்து வருவதாக, விவசாயிகள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். முக்கியமாக A64 நெடுஞ்சாலை விவசாயிகளினால் முடக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்வாதாரத்திற்காக நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜோன் மார்க் எனும் 53 வயதுடைய விவசாயி, தனது மிகவும் மோசமான வாழ்வு நிலையை விளக்கி உள்ளார்.
«பொருளதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து மீளவே முடியவில்லை. 35 வருடங்களாக வாரம் 7 நாட்களும் காலை முதல் இரவு வரை விவசாயம் செய்தும், என்னால் அடிப்படை வாழ்க்கை கூட வாழ முடியவில்லை. அரசாங்கம் எங்களை வாழவிடவில்லை»
«எனது பாட்டன், எனது தந்தை என விவசாயம் செய்த எங்கள் நிலத்தில் நான் மூச்சடக்கிப் போகின்றேன்»
«18 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்த நான், எனது ஓய்வூதியத்திற்கு இன்னமும் 10 வருடங்கள் போராட வேண்டி உள்ளது. அது மிகவும் நீண்ட காலம். தாக்குப் பிடிக்க முடியவில்லை»
என பிரான்சில் ஒரு விவசாயியின் அவலக்குரல் கேட்டுள்ளது. இது பல்லாயிரம் விவசாயிகளின் ஒருமித்த குரல்!!