Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்குச் செல்லும் ஜனாதிபதி மக்ரோன்! - பிரெஞ்சு ஊடகவியலாளரை வெளியேற்றுகிறதா இந்தியா..??

இந்தியாவுக்குச் செல்லும் ஜனாதிபதி மக்ரோன்! - பிரெஞ்சு ஊடகவியலாளரை வெளியேற்றுகிறதா இந்தியா..??

24 தை 2024 புதன் 07:41 | பார்வைகள் : 3278


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணத்தின் போது, இந்தியாவில் இருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபடும் பிரெஞ்சு ஊடகவியலாளர் ஒருவரை அங்கிருந்து நாடு கடத்தும் வேலையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Le Point உள்ளிட்ட ஊடகங்களுக்கான செயற்பட்டு வரும் Vanessa Dougnac என்பவரையே நாடு கடத்தும் நோக்கோடு இந்தியா செயற்பட்டு வருகிறதாகவும், அவர், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ‘முரணான’ கருத்துக்கள் கொண்டுள்ளவர் எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி மிகவும் பரபரப்பாகியுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிராக இந்தியா செயற்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, "இந்தியா எனது வீடு, நான் ஆழமாக நேசிக்கும் மற்றும் மதிக்கும் நாடு, இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலிலும் நான் ஈடுபட்டதில்லை" என Vanessa Dougnac தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்