அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் MS Dhoni கலந்து கொண்டாரா...?
24 தை 2024 புதன் 08:12 | பார்வைகள் : 1482
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளாதது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். மேலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதோடு, விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோயில் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர், ஜடேஜா வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், MS Dhoni கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தோனி ஏன் கோயில் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தோனி விருப்பம் காட்டுவது இல்லை என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், பொது இடங்களுக்கு வந்து தன்னை விளம்பரபடுத்திக்கொள்ள விரும்பாததால் இதனை புறக்கணித்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.